Header Ads



அநுரகுமார தரப்புக்கு முஜீபுரின் ஆலோசனை

 
இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது. சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டுமாயின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். 


இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 


"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரிகளை குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமளவில் நிவாரணம் வழங்குவதாக குறிப்பிடுகிறார்.


நாடு அரிசியின் விலை 230 ரூபா என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் சந்தையில் 250 ரூபாவுக்கே அரிசி விற்பனை செய்யப்படுகிறது. அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலும், சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.


அரிசி உற்பத்தியாளர்களே அரிசியின் விலையை இன்றும் தீர்மானிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறார்கள்.


இந்திய விலைக்கு அமைய ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை நாணய அலகில் 150 ரூபாவை செலவிடுகிறார்கள். அத்துடன் இறக்குமதி செய்யப்படும் ஒருகிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகிறது.


வரி உள்ளடங்களாக ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகர்கள் 215 ரூபாவை செலவிட நேரிடும். இவ்வாறான நிலையில் அவர்களால் எவ்வாறு 220 ரூபாவுக்கு அரிசியை விற்பனை செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

No comments

Powered by Blogger.