Header Ads



விட்டுக்கொடுப்பும், மன்னிப்பும் நீங்கள் உங்களுக்கே செய்துகொள்ளும் சிறந்த தருமங்களாகும்...


விட்டுக்கொடுப்பும், மன்னிப்பும் நீங்கள் உங்களுக்கே செய்துகொள்ளும் சிறந்த தருமங்களாகும்.  


பிறர் பயனடைய முன்னர் நீங்கள் அடைந்துகொள்ளும் ஒரு பயனாகும்.  


நீங்கள் ஒருவரை மன்னித்து விடும் போது, அது அவருக்கு செய்யும் பேருபகாரம் போன்றுதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.  


ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் அங்கே உங்கள் சுய கெளரவத்தை பாதுகாத்துக் கொள்கிறீர்கள்,  உங்களிடமுள்ள தாராள மனதை வெளிப்படுத்துகின்றீர்கள்.


உங்கள் ஆன்மாவுக்கு நீங்கள் ஆறுதல் அளிக்கிறீர்கள்,  உங்கள் மூளைக்கு நீங்கள் ஓய்வு கொடுக்கின்றீர்கள்,  


உங்கள் நரம்பு மண்டலங்களை நீங்கள் சமாதனப்படுத்துகின்றீர்கள்.

Imran Farook

No comments

Powered by Blogger.