Header Ads



ஆணவம் ஷைத்தானிய தீயகுணம்.


 Mohammed Javith


அல்லாஹுவின் படைப்பில் நாம் மிகவும் அற்பத்திலும் அற்பமான புள்ளி கூட இல்லை எந்தவகையிலும் ஆணவம் வேண்டாம் நான் தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  நம்மால் சொல்ல முடியுமா? நான் தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  நம்மால் சொல்ல முடியுமா? நான் தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  நம்மால்  சொல்ல முடியுமா? நான் தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  நம்மால்  சொல்ல முடியுமா?? 


இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அல்லாஹ்" அவன் ஒருவனுக்கே "நான்" என்று  சொல்வதற்கு அனைத்து  அதிகாரமும்  உரிமையும்  உண்டு மனிதனுக்குள் மட்டும் அவன் இயக்கவில்லை இந்த அண்ட சராசரங்களையும் கட்டுப்படுத்தி நுட்பமாக இயக்குகிறானே சர்வ வல்லமையுள்ளவன் அவன் பாக்கியவான் பூமியிலே ஒரு மரத்தின் சாதாரண ஒரு  இலை உதிர வேண்டுமானாலும் அவனது அனுமதி பெற்றே அது உதிர்கிறது

ஏன்னென்றால் கர்வம் அவனுக்கு மேலாடை பெருமை அவனது கீழாடை மனிதனின் எண்ணம் எதை எண்ணுகிறது என்று அவன் துல்லியமாக அறிந்தவன்  ஆகையால் நான் நான் என்ற அகந்தையையும் ஆணவத்தையும் விட்டு அனைவரிடமும் அன்பாக இருப்போம் உலகைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அது அல்லாஹுவுக்குரியது.


 உணவைப்பற்றியும்கவலைப்பட வேண்டாம் அதுவும்  அல்லாஹுவிடமிருந்தே கிடைக்கிறது எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம் அதுவும் நம்மை படைத்த அல்லாஹுவின் கரத்தில் தான் உள்ளது 

அல்லாஹுவின் மீதான பொறுப்பு சாட்டுதல் அழகிய முறை நம்மிடம் இருந்தால் எந்த சந்தர்ப்பமும் நம்மீது ஆதிக்கம் செலுத்த முடியாது எந்தக் கஷ்டமும் நம்மை ஊனப்படுத்திவிடாது அவன் விதித்ததை ஒப்புக்கொண்டு அனைத்தையும் இலகுவாக கடந்து செல்வோம். யா_அல்லாஹ்!


உனது கருணையை எதிர்பார்க்கிறோம். கண் இமைக்கும் நேரம் கூட நீ எங்களை எங்கள் பொறுப்பில் விட்டு விடாதே!அல்லாஹ் பாதுகாத்தவர்களைத்தவிர 👇


என் இறைவா என்னைத் தனியாளாக விட்டுவிடாதே 

📖அல்குர்ஆன் 21:89

No comments

Powered by Blogger.