Header Ads



தொடர் சர்ச்சைகளில் அர்ச்சுனா

 
புதிய நாடாளுமன்ற உறுப்பினராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவு செய்யப்பட்டமையிலிருந்து தற்போது வரை தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கிகொண்டே இருக்கின்றார்.


இந்தநிலையில், அதற்கான காரணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவர் விளக்கம் கொடுத்தாலும் மக்கள் மத்தியில் குறித்த செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்துவதாகவுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இவ்வாறான சூழ்நிலையில், யாழ் வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் பாதுகாவலருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.


குறித்த காவலர், தன்னை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்ததாக கூறிய அர்ச்சுனா, அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


அத்தோடு, பாதுகாவலரின் கையடக்க தொலைபேசியை தன்னிடம் ஒப்படைக்குமாறும் தன்னை எவ்வாறு காணொளி எடுக்க முடியும் எனவும் அர்ச்சுனா விவாதம் செய்துள்ளார்.


மேலும், குறித்த பாதுகாவலர் அந்த இடத்திலிருந்து செல்ல முற்பட்ட போது அர்ச்சுனா அவரை இடைமறிப்பதையும் காணொளியில் அவதானிக்கக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.