Header Ads



கழுத்தை ஊடறுத்த தடி


கூரிய தடி ஒன்று கழுத்தில் குத்தி கழுத்தை ஊடறுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், வைத்தியர்களால் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால்  கூரிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் காப்பாற்றப்பட்டார். 


குறித்த சத்திரசிகிச்சை செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.  


முதியவர், உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,   விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சை மூலம் அவரது கழுத்தில் இருந்து  தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார். 


இவ் வெற்றிகரமான சத்திரசிகிச்சை உணர்வழியியல் மருத்துவ நிபுணர் நாகேஸ்வரன் தலைமையிலான மயக்க மருந்து (Anesthesia) அணியினருடன் இணைந்து


சத்திரசிகிச்சை நிபுணர் ரஜீவ் நிர்மலசிங்கம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

க. அகரன்

No comments

Powered by Blogger.