ஆச்சரியம் என்னவென்றால்...
ஒரு இடத்தில் பத்து ஆடுகள் இருப்பதைக் கண்டால் அவைகளை மேய்க்கவென ஒரு மேய்ப்பாளன் இருப்பான் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இந்த மண்ணில் உள்ள பல கோடிக்கணக்கான உயிரினங்கள், அந்த விண்ணிலுள்ள பல கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள், கிரகங்கள், கோள் மண்டலங்கள் இவைகளை எல்லாம் பார்க்க, பராமரிக்க, கண்காணிக்க ஒருவன் இல்லை என்று இங்கே ஒரு கூட்டம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வளவு பிரமாண்டமான பிரபஞ்சத்தை ஒரு நித்திய ஜீவன், ஒரு காரணகர்த்தா படைத்து பரிபாலனம் செய்கிறான் என்பதை ஏற்க மறுக்கின்றனர்.
(அல்லது, அவர்கள் எதுவும் இன்றி (தாமாகவே) தோன்றினார்களா? அல்லது அவர்கள் அவர்களையே படைத்துக் கொண்டார்களா? அல்லது, விண்ணையும் மண்ணையும் அவர்கள்தான் படைத்தார்களா? இல்லை, அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.) அல்குர்ஆன் : 52 / 35 - 36
✍ மஹிர் பக்ஜாஜி
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment