Header Ads



அல்லாஹ் மகனை அழைத்துக் கொண்டான்.. ஜனாஸாவில் பல அற்புதங்களை கண்டேன்..!!

 
அல்ஹம்துலில்லாஹ். 


சற்று முன்னர் சம்மாந்துறைக்கு விஜயம் செய்தோம்.


அண்மையில் இடம்பெற்ற மாவடிப்பள்ளி அனர்த்தத்தின் போது உயிர் நீத்த ஷஹீதுகளுடைய இல்லத்துக்கு சென்றோம் பல புதிய அனுபவங்கள் கிடைத்தன.


அவர்கள் வாழுகின்ற வீடு 

அவர்களின் மரியாதை

அவர்களின் ஆடை அழகு

உபசரிக்கும் கண்ணியம். 

கவலையிலும் புன்னகை

பொறுமையிலும் பணிவு 

இன்னும் பல விடயங்களை 

நேரில் கண்டோம்.. 


கடைசியாக மர்ஹும் தஷ்ரிப் அவர்களின் தந்தையை சந்தித்தோம்.. கவலை கலந்த புன்னகை முகத்தோடு வரவேற்றார்.


அவரிற்கும் எங்களூரிற்கும் 14 வருடங்கள் தொடர்பு இருப்பதாகச் சொன்னார். ஆசையா இருந்தது பல நேரம் பேசிக்கொண்டோம்.


என் தங்க மகனின் ஜனாஸாவை இரண்டாவதாக பார்த்தவன் நான்தான்.. அந்த நேரத்தில் மாளிகைக்காடு- சாய்ந்தமருது ஜனாசா நலன்புரிச் சங்கம் செயற்பட்ட விதம் ஆச்சரியம் அளித்தது. எல்லாம் சிஸ்டமாக செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


#என் மகனின் ஜனாஸாவில் பல அற்புதங்களை கண்டேன் என கூறி "என் மகனை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்" என கூறிவிட்டு அழுதார்.. அவரது அழுகையும் அமைதியாகவே இருந்தது. 


உண்மையாகவே தஷ்ரிப் அவர்களின் தந்தை கடும் ஸ்ட்ராங்காக இருக்கிறார். இருப்பதில் அவர்தான் பலவீனமாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக இருக்கிறார்.


இதுவும் எங்களுக்கு ஒரு படிப்பினை.!

அல்லாஹு அக்பர்.

Sulaiman Raafi 

02.12.2024 | 10.51p.m

No comments

Powered by Blogger.