Header Ads



எரிக்கப்பட்ட ஜனாஸா விபரங்களை வெளியிட, அரசாங்கம் மறுப்பது ஏன்..??


கொவிட் தொற்றில் மரணித்து தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு வைத்திய நெறிமுறையில் இடமில்லை. அதனால் அனை வெளியிட முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிக்கிழமை (17) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பனிர் ரவூப் ஹக்கீம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


ரவூப் ஹக்கீம் தனது கேள்வியில், கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, தகனம் செய்யப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை யாது? 


அவ்வாறு மரணித்த ஒவ்வொரு நபரினதும் பெயர், பாலினம், இனம், சமயம் நெருங்கிய உறவினரின் பெயர், முகவரி, சடலம் தகனம் செய்யப்பட்ட திகதி மற்றும் இடம் தனித்தனியே தெரிவிக்க முடியுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்து பதிலளிக்கையில்,


கொவிட் தொற்றில் மரணித்தவர்களில் 13183பேர் தகனம் செய்யப்பட்டுள்ளனர். என்றாலும் தகனம் செய்யப்பட்டவர்களி்ன் பெயர், பாலினம், இனம், சமயம் நெருங்கிய உறவினரின் பெயர், முகவரி, சடலம் தகனம் செய்யப்பட்ட திகதி மற்றும் இடம் போன்ற தகவல்களை வெளியிட முடியாமல் இருக்கிறது. ஏனெனில் 2016 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டம் மற்றும் வைத்திய அடிப்படை நெறிமுறைக்கமைய இந்த விடயங்களை தெரிவிக்க முடியாது என்றார்.


இதன்போது எழுந்த ரவூப் ஹக்கீம், அமைச்சரின் இந்த பதில் ஆச்சரியமிக்கதாகும். நான் கேட்டிருந்த இந்த தகவல்களை அரசாங்கம் பாதுகாத்து வைத்திருக்க வேண்டியவையாகும். இவை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.அவ்வாறு இல்லாமல் இதனை மறைக்க முற்படுவது ஒட்டுமொத்த சுகாதார அமைச்சின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் செயலாகும்.


அத்துடன் சுகாதார அமைச்சுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளரும் இவ்வாறான நடவடிக்கையின்போது மெளனமாக இருந்தது மட்டுமல்லாது அதனை நியாயப்படுத்தியிருந்தார். இவ்வாறான நிலைமையிலே உங்களது அரசாங்கத்துக்கு முஸ்லிம்கள் பாரியளவில் வாக்களித்தார்கள் என்பதை நினைவில் பைத்துக்கொள்ளுங்கள். அதனால் வேறு விடயங்களில் மறைந்துகொண்டு இந்த விபரங்களை வழங்காமல் இருப்பது பிழையான நடவடிக்கையாகும். அதனால் தயவது செய்து இந்த தகவல்களை எமக்கு பெற்றுத்தர வேண்டும் என்றார்.


அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், கொவிட் தொற்று தொடர்பில் கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானங்களில் எங்களு்ககு உடன்பாடு இல்லை. அந்த பிரச்சினை தொடர்பில் நாங்கள் மிகவும் கவலையடைகிறோம்.ஆனால் இந்த விடயத்தில் தகவல் மறைக்கும் விடயம் எதுவும் இல்லை. மருத்துவ நெறிமுறைக்கமைய இந்த தகவல்களை வெளியிட முடியாமல் இருக்கிறது என்றார்.


அதற்கு ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில், கொவிட்டில் மரணித்தவர்களின் தகவல்கள் தொடர்பில் மருத்துவ நெறிமுறைக்கமைய தெரிவிக்க முடியாது என தெரிவிக்கிறீர்கள். ஆனால் அவ்வாறான நெறிமுறை இருப்பது தொடர்பாக நான் அறிந்ததில்லை. அவ்வாறு இருக்குமானால் அதனை எங்களுக்கு காட்டுங்கள். தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர், முகவரி போன்ற விடயங்களை வெளியிடுவது எவ்வாறு மருத்துவ நெறிமுறைக்கு முரணாகிறது என கேட்கிறேன். கடந்த அரசாங்கம் செய்த விடயங்கள் தவறு என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பும் கோரி இருந்தார். ஆனால் தற்போதுள்ள கேள்வி, பலவந்தமாக தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை ஏன் வழங்க முடியாது என்பதாகும் என்றார்.


அதற்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வைத்திய நெறிமுறைக்கமையவே எனக்கு இந்த விபரங்களை எனக்கு வழங்க முடியாமல் இருக்கிறது. வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


No comments

Powered by Blogger.