இந்தியா அரிசி வந்தது - தட்டுப்பாடு குறையுமென நம்பிக்கை
நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று 75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து சம்பா மற்றும் வெள்ளை பச்சை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றும் (12) நாளையும் (13) கூடுதலான அரிசி தொகை நாட்டை வந்தடைய உள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வருவதன் மூலம் நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என தெரிவிக்கின்றார்.
நேற்றிரவு "டிவி தெரணவில்" ஒளிபரப்பான புதிய பாராளுமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சமித பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர் சந்திரலால் குணசேகர கூறுகையில், தற்போது கடைகளுக்கு அரிசி விநியோகிப்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார்.
Post a Comment