இளிச்சவாயன் போல வளவளவென...
ஆனால் ஸ்மித் என்ற கைதிய மாத்திரம் காவலர்களால் மரியாதையாக நடாத்தப்பட்டான், சிறப்பாக கவனிக்கப்பட்டான். இதனால் மற்ற கைதிகள் எரிச்சலடைந்தனர். ஸ்மித் மீது காழ்ப்பையும் வெறுப்பையும் வெளிப்படுதினர். இவன் உளவுப் பிரிவால் நியமிக்கப்பட்ட ஒரு உளவாளியாகத்தான் இருக்கும் என்று ஐயம் கொண்டனர். ஆனால் அவனோ நான் அப்படிப்பட்டவன் அல்ல, உங்களைப் போன்ற ஒரு சாதாரண கைதிதான் என சத்தியம் செய்து சொல்லிக் கொண்டிரந்தான்.
ஒரு முறை சகல கைதிகளும் ஒன்றிணைந்து, அப்படியென்றால் உனக்கு மாத்திரம் சிறைக் காவலர்களால் விசேட கவனிப்பும்,மரியாதையும் கிடைக்க என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா? என அவனிடம் வேண்டினார்கள்.
அதற்கு ஸ்மிட் அவர்களிடம், "சரி, நான் சொல்கிறேன், நீங்கள் உங்கள் வீட்டுக்கு வாராந்தம் கடிதம் எழுதும் போது என்ன எழுதுகிறீர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் எல்லோரும்: "நாங்கள் இந்த கேடுகெட்ட சிறைக் காவலர்களின் கைகளால் நாளாந்தம் நாம் அனுபவிக்கும் கொடுமையையும், அநீதிகளையும், அநியாயங்களையும்தான் கடிதங்களில் எழுதுகிறோம் " என்றனர்.
இதைக் கேட்டு புன்னகைத்த ஸ்மித்:
"என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வாரமும் நான் என் வீட்டுக்கு கடிதம் எழுதும்போதும், கடைசி வரிகளில் நான் சிறைச்சாலை காவலர்களை புகழ்ந்து எழுதுவேன், அவர்கள் நம்மை அன்பாகவும், மறியாதையாகவும் நடாத்துவதாக எழுதுவேன். சில சமயங்களில் நான் அவர்கள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டே சிலாகித்து எழுதுவேன்" என்று சொன்னார்.
இதை கேட்ட மற்ற கைதிகள்: இதற்கும் நீ விசேஷமாக கவனிக்கப்படுவதற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டனர்.
அதற்குஸ்மித்: "எங்கள் கடிதங்கள் அனைத்தும் காவலர்களால் வாசிக்கப்பட பின்னரே சிறையிலிருந்து வெளியே போகும், அதில் எழுதப்பட்ட ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய விஷயங்களையும் உன்னிப்பாக அவதானிப்பார்கள், இன்றிலிருந்து நீங்கள் கடிதம் எழுதும் விதத்தை மாற்றிப்பாருங்கள்! பின்னர் என்ன நடக்கும் என்று நீங்களே பாருங்கள்! என்றார்.
ஆனால் அடுத்த வாரம் நடந்தது வேறு!சிறைக் கைதிகளுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரக்களு மேன்மேலும் சித்திரவதை அதிகரித்து. ஸ்மித் உள்ளடங்களாக அனைவரும் மிக மோசமாக நிடாத்தப்பட்டனர். என்ன நடந்ததென்று ஸ்மித்தும் சிறைக்கைதிகளும் ஆச்சரியமடைந்தனர்.
அடுத்த நாள் ஸ்மித் சக கைதிகளிடம்: "நீங்கள் கடிதத்தில் என்ன எழுதினீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர்கள் "நாங்கள் இந்த கேடுகெட்ட காவலர்களை ஏமாற்றி அவர்களின் நம்பிக்கையையும் பெற ஸ்மித் எங்களுக்கு ஒரு புதிய யுக்தியையும் கற்றுத் தந்துள்ளார் என்று எங்கள் வீடுகளுக்கு நாங்கள் எழுதி அனுப்பினோம்!"
என்றனர்.
அப்போது ஸ்மித் துக்கத்தால் தன் கன்னத்திலே அறைந்துகொண்டான். தான் செய்ய முட்டாள்தனத்தை எண்ணி வருந்திக் கொண்டான்.
படிப்பினை:
மற்றவர்களுக்கு உதவுவது நல்லதுதான், ஆனால் நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பதை நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். கேட்பவர்கள் எல்லோரும் இரகசியங்களை பாதுகாக்கமாட்டார்கள். நம்மோடு இருக்கும் சிலர், நடந்து கொள்ளும் விதம் தெரியாதவர்களாக இருக்கலாம். நமக்கு ஏற்ற ஒன்று நம்மோடு இருப்பவர்களுக்கு ஏற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க முடியாது.
இளிச்சவாயன் போல வளவளவென தெரிந்தையெல்லாம் பேசிக் கொட்டாதீர்கள். கேட்பவர்கள் எப்போது காட்டிக் கொடுப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாது.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment