Header Ads



புதிய இராணுவத் தளபதி நியமனம்


புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்பட்டுள்ளார்.


இதன்படி அவர் இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாவார்.


மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக செயற்பட்டு வந்தார்.


தற்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது இரண்டாவது சேவை நீடிப்புக்கு அமைய இன்று வரை சேவையாற்றி வந்தார்.


இதேவேளை, இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.