தொடரும் ஜமீலாவின் சாதனை
I.A.S., I.P.S., I.F.S., I.R.S., தெரியும் I.E.S., உயர்பதவியும் உண்டு.
அகில இந்திய அளவில் சமீபத்தில் Indian Economic Service உயர் பதவிக்கு நடந்த தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான போது, அகில இந்திய அளவில் 12வது ரேங்க் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஒரே மாணவி எனும் பெருமைக்குரிய தேர்ச்சி பெற்று சாதனை படைத்தவர் கோட்டயம் சேர்ந்த அல் ஜமீலா.
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் மகளை மருத்துவர் ஆக்க வேண்டும் என்று மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பிரிவு எடுக்க தந்தை வற்புறுத்திய போதும் அல் ஜமீலா பொருளாதாரம் படிக்க விரும்பி அதை தேர்வு செய்ய பெற்றோர் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்தனர்.
தொடர்ந்து இளங்கலை, முதுகலை முடித்த அல் ஜமீலா தற்போது டெல்லி ஜே.என்.யூ வில் பொருளாதாரத்தில் P.hd., செய்து வருகிறார்.
இதற்கிடையில் I.E.S. தேர்வு நடப்பது தெரிந்து விண்ணப்பித்து தேர்வு எழுதியவர் அதற்காக 21/2 மாதங்கள் கடினமாக உழைத்தது தற்போது பலன் கண்டுள்ளதுடன் முதல் முயற்சியிலேயே அகில இந்திய ரேங்குடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கூடவே இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் IES எனும் பெருமையும் அல் ஜமீலாவுக்கு உண்டு.
-+Azheem-
Post a Comment