Header Ads



அடுத்த சபாநாயகர், ரிஸ்வி சாலியா..??


சபாநாயகர் அசோக ரன்வெல தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அப்பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது பிரதி  சபாநாயகராக ரிஸ்வி சாலி பணியாற்றுகிறார்.


இந்நிலையில் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கு  ரிஸ்வி சாலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் உயர் வட்டாரங்கள் ஜப்னா  முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தன.


ஒரு சபாநாயகரின் பதவி விலகல், ஜனாதிபதியால் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அது அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகிறது.


இதனையடுத்து, புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான களம் அங்கு உருவாக்கப்படுவதாக நாடாளுமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.


நிலையமைப்பு கட்டளை 6 - 1இன் படி, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பதவி விலகல் குறித்து அறிவிக்கப்பட்டவுடன், புதிய சபாநாயகர் நியமனம் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் நடைபெறும் என்று துணை பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.


சபாநாயகர் பதவியில் வெற்றிடம் ஏற்படும் போதெல்லாம், அடுத்து வரும் முதல் கூட்டத்திலேயே நாடாளுமன்றம் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் கூறுகின்றன.


இந்தநிலையில், சபாநாயகர் அசோக ரன்வெல பதவி விலகியதை அடுத்து, 2024 டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றம் கூட உள்ளது, அங்கு புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். 

No comments

Powered by Blogger.