இப்லீஸின் மதிநுட்பம்
இப்லீஸ் ஒரு புத்திசாலியான திருடன்.
வெட்டியான வீட்டில் திருட மாட்டான்.
அவன் தொழுகை விரிப்புக்களில் வந்து காத்து நிற்பான்.
தனவந்தனின் தானத்தில் பொறிவைத்திருப்பான்.
அறநெறியில் நடப்பவனின் வழியில் மறைந்திருந்து பிடிப்பான்.
குடிகாரன், வட்டிக்காரன், நெறி கெட்டவன் பக்கம் சென்று நேர விரயம் செய்யமாட்டான். அவன் செய்ய வேண்டிய பணியை அவர்களே செய்துவிட்டார்களே!
சன்மார்க்கமாக நடப்பவன், மார்க்கத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவன் என்று, அவனே சொல்லிவிட்டான்.
✍ முஸ்தபா மஹ்மூத்
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment