காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படட்டும், பணயக்கைதிகள் விடுவிக்கப்படட்டும் - போப்
போப் பிரான்சிஸ், காசாவில் உள்ள "மிகப் பாரதூரமான" மனிதாபிமான நிலைமையை கண்டித்தார்.
வத்திக்கானில் தனது பாரம்பரிய கிறிஸ்துமஸ் உரையில் ஹமாஸால் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள கிறிஸ்தவ சமூகங்களைப் பற்றி நான் நினைக்கிறேன், குறிப்பாக காஸாவில், மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. போர்நிறுத்தம் ஏற்படட்டும், பணயக்கைதிகள் விடுவிக்கப்படட்டும், பசி மற்றும் போரினால் வாடி வதங்கிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்படட்டும்,'' என்றார்.
Post a Comment