தகவல்களை மாற்றி, பொய் தகவல்களைப் புகுத்தி குடிநீர் போத்தல்களை உற்பத்தி செய்த நிறுவனம்
தகவல்களை மாற்றி, பொய்யான தகவல்களைப் புகுத்தி குடிநீர் போத்தல்களை உற்பத்தி செய்த நிறுவனமொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை முற்றுகையிட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய, அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள், மாவனெல்ல ஹெம்மாதகம பிரதேசத்தில் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சுகாதார அமைச்சினால் பெறப்பட்ட பதிவுச் சான்றிதழ் காலாவதியாகியுள்ள நிலையில், குறித்த தகவல்களைப் பொய்யாகப் பயன்படுத்தி குறித்த குடிநீர் போத்தல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது, விநியோகிக்க தயார் நிலையில் இருந்த 500 மில்லி லீட்டர் தண்ணீர் போத்தல்கள் 1,904 ம் , ஒரு லீட்டர் தண்ணீர் போத்தல்கள் 484 ம் , ஒன்றரை லிட்டர் தண்ணீர் போத்தல்கள் 576 ம் மற்றும் 19 லீட்டர் தண்ணீர் போத்தல்கள் 34 ம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Post a Comment