ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அநுரகுமார நடவடிக்கை எடுப்பாரா..?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்திற்கு எதிராக புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுப்பாரா என்னும் கேள்வி பலர் மத்தியில் இருந்து வருகின்றது.
இந்நிலையில், மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக தன்னிடம் ஆதார கோப்புகள் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியிருந்தார்.
எனவே, அவற்றை அவர் தூசு தட்டி எடுத்து ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்தினர், ஆதராங்களை சமர்ப்பித்து தங்களை கைது செய்யுங்கள் எனவும் பகிரங்கமான தெரிவித்து வருகின்றனர்.
ஆகையால், இது குறித்த அநுரவின் நடவடிக்கைகளை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி கூறுகின்றார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
Post a Comment