Header Ads



அச்சம் கொள்ள வேண்டாம், மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகளில் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்ற செய்திகள் வௌியாகியுள்ளதாக குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்தார்.


எவ்வாறாயினும், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் டிசம்பர் 23ஆம் திகதி நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


இந்த வருடத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.