அறுகம்குடா பகுதியில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது - அமைச்சரவைப் பேச்சாளர்
அம்பாறை, அறுகம் குடா பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது என்றும், குறித்த பகுதிக்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, ”அறுகம் வளைகுடாவின் நிலைமை சீராக உள்ளது.
அங்கு பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை. மீண்டும் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவாக வருகை தர ஆரம்பித்துள்ளனர்.
பிரித்தானியாவும் தங்கள் நாட்டுப் பிரஜைகளுக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, விரைவில் இதன் தகவல்களை வெளியிடுவோம்” என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment