சவூதி தூதரக ஏற்பாட்டில், இலங்கையில் சர்வதேச அரபு மொழித்தினம்
இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச அரபு மொழித்தினம் இன்று -18- கொழும்பில் நடைபெற்றது.
பிரதி வெளிவிவகார அமைச்சரும், சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
450 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மற்றும் கிட்டத்தட்ட 25 நாடுகளில் உத்தியோகபூர்வ அந்தஸ்தைப் பெற்றுள்ள அரபு, மகத்தான கலாச்சார முக்கியத்துவம் கொண்ட உலகளாவிய மொழியாகும்.
51 ஆண்டுகளுக்கு முன்பு, 1973 இல் இன்று போன்ற ஒரு நாளில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அரபு மொழியை அமைப்பின் ஆறாவது அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment