Header Ads



ஹிஸ்புல்லாவை கௌரவிக்கும் நிகழ்வு


சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவை கௌரவிக்கும் நிகழ்வு  (14) சனிக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்றது. 


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.எம். தௌபீக் தலைமையில் சம்மேளனத்தின் மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.


 பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்கு பொன்னாடை போற்றி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இதன்போது இடம்பெற்றது. 


இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.