நாட்டின் சட்டம், சர்வதேச சட்டத்தின்படி ரோஹிங்யா அகதிகள் மீது நடவடிக்கை
இந்த அகதிகள் மீது இந்த நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியான்மரில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இந்த அகதிகள் குழு 16 நாட்களுக்கு முன்பு 3 படகுகளை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், பயணத்தின் போது 2 கப்பல்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால், அவற்றின் பணியாளர்களும் இந்த படகில் ஏறியுள்ளனர்.
பயணத்தின் போது, 4 குழந்தைகள் உட்பட 6 பேர் சுகவீனம் மற்றும் பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (19) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்த இந்தக் குழுவை அப்பகுதி மீனவர்கள் பார்த்ததை அடுத்து பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 102 பேர் கொண்ட 12 மியன்மார் அகதிகள் அடங்கிய கப்பலின் பணியாளர்கள் இலங்கை கடற்படையினரின் தலையீட்டில் இன்று காலை திருகோணமலை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.
முறையான உணவு மற்றும் பானங்கள் இல்லாததால், இந்த குழுவினர் பலவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment