நீர்கொழும்பில் டெங்கு குறைந்து, எலிக்காய்ச்சல் தலை தூக்கியது
- இஸ்மதுல் றஹுமான் -
நீர்கொழும்பு பிரதேசத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறைந்துள்ளதுடன் எலிக்காய்ச்சல் நோய் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
2024 ம் ஆண்டில் டிசம்பர் 29ம் திகதி வரை 181 டெங்கு நோயாளர்களே அடையாளம் கானப்பட்டுள்ளனர். இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் பாரிய அளவில் குறைவாகும் என நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜயந்த சிறிவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் 2023ல் 2581 டெங்கு நோயாளர்கள் அடையாளம் கானப்பட்டனர். 2017ல் 4244, 2018ல் 421, 2019ல் 2366, 2020 ல் 225, 2021ல் 789, 2022ல் 801 என்ற அடிப்படையிலேயே டெங்கு தொற்றுக்கு ஆளானார்கள்.
டெங்கு நுளம்புக்கான புகையை சகல இடங்களிலும் விசுறுவதை நிறுத்தியதனால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது என விபரித்த சுகாதார வைத்திய அதிகாரி "ஈடிஸ்" குழும்பத்தைச் சேர்ந்த நுளம்புகளே டெங்குவை பரப்புகின்றன.
3 வீதம் டெங்கு நுளம்பு இருக்கும் இடத்தில் 97 வீதம் ஏனைய நுளம்புகள் இருக்கின்றன. புகை விசுறுவதனால் சகல வகை நுளம்புகளும் இறக்கின்றன.
ஏனைய நுளம்புகளுக்கு மத்தியில் டெங்கு நுளம்பு உற்பத்தி குறைவடைகின்றன. இதனால் எல்லா இடங்களுக்கு புகை விசுறுவதை தவிர்த்து டெங்கு நோயாளிகள் அடையாளம் கானப்பட் வீடுகளுக்கு மாத்திரமே புகை விசுறுவதை அமுல்படுத்தினோம்.
இதன் மூலம் டெங்கின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடிந்ததாக கூறினார். புகை விசுறுவதற்காக கடந்த காலத்தில் 98 மில்லியன் ரூபா செலவிடப்பட்டாலும் 2024ல் 8 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டுள்ளது.
டெங்கை கட்டுப்படுத்திய போதும் எலிக் காய்ச்சல் தலை தூக்கியுள்ளது. 2023ல் ஆறு பேர் எலிக்காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 2024ல் அது பத்தாக அதிகரித்துள்ளது. அன்மைக்காலத்தில் திடீரென நான்கு பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளானார்கள் எனத் தெரிவித்த டாக்கர் ஜயந்த சிறிவர்தன அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மக்கள் நீரில் நடமாடியதில் இது ஏற்பட்டிருக்கலாம் எனக்கு கூறிய அவர் நீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடும் முறையை ஏற்படுத்துவதன் மூலம் எலிக் காய்ச்சலை தடுக்க முடியும் என்றார்.
Post a Comment