புதிய வேட்புமனுக்களை கோர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபராலும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, இந்த வரைவு மனு அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க நேற்று அறிவித்துள்ளார்.
இதற்கமைய, தேவையான நடைமுறைகள் முடிந்தவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment