குவைத்திற்கு சென்ற கள்ளக் காதலி, முகவரின் கழுத்தை அறுத்த நபர் - குருநாகலில் அதிர்ச்சி
வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள தனது கள்ளக்காதலியுடன் தொடர்பினை ஏற்படுத்திதருமாறு கோரிய நபர், அக்கோரிக்கை நிறைவேறாமையால், வெளிநாட்டு முகவரின் (வயது 52) கழுத்தை அறுத்ததுடன், அங்கிருந்த பெண் ஊழியரையும் காயப்படுத்திவிட்டு, தன்னுயிரையும் மாய்க்கவும் முயன்றுள்ளார்.
இந்த சம்பவம், நாவின்ன பிரதேசத்தில், வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
குருநாகல், அஸ்வெத்தும பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நாவின்ன பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக தன்னுடைய கள்ளக்காதலியை குவைட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிவைத்துள்ளார்.
அந்த நிலையத்துக்கு சென்ற 32 வயதான நபர், தனது கள்ளக் காதலியுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி தருமாறு கோரியுள்ளார். எனினும், அது வியாழக்கிழமையும் (12) நிறைவேறாமையால், முகவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முகவரின் கழுதை அறுத்துவிட்டு, அங்கிருந்த பெண் ஊழியரையும் தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் விரைந்த குருநாகல் பொலிஸார், சந்தேகநபரை கத்தியுடன் கைது செய்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment