Header Ads



அன்பின் கணவன்மார்களே...!


உங்கள் வீடுகள், பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளாக இருந்தால், உங்கள் மனைவி மீது அதிகம் அதிகம் கருணை காட்டுங்கள்.


கண்டிக்கும் வார்த்தைகளை அதிகம் பாவிக்காதீர்கள். ((என்ன சமைத்தீர்கள் - ஏன் மதிய உணவு தாமதமாகியது - ஏன் இன்னும் வீட்டைச் சுத்தம் செய்யவில்லை - ஏன் உடைகள் இன்னும் துவைக்கவில்லை - ஏன் நீ மெலிந்து விட்டாய் - ஏன் உனது அழகும் கவர்ச்சியும் குறைந்து வருகிறது)) இப்படி உங்களுக்கே நன்கு விடைகள் தெரிந்த கேள்விகளைக் கேட்டு அவளை சங்கடப்படுத்தாதீர்கள். 


அவள் மன அழுத்தத்திலும் சோர்விலும் இருப்பதைக் கண்டால் உங்களால் முடியுமான ஆதரவுகளை வழங்குங்கள். 


உங்கள் அன்பு முத்தங்களையும் அரவணைப்பையும் வழங்குங்கள். அவள் பணிகளை நீங்கள் பொறுப்பெடுப்பதோடு அவளை சற்று நேரம் ஓய்வெடுக்க வசதிகள் செய்து கொடுங்கள். 


அவள் பணிச் சுமைளை முறையிடும் போது 'நானும் இருக்கிறேன் என்று ஆறுதல் வார்த்தைகளை சொல்லுங்கள். 


பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை பார்க்க பராமரிக்க நீங்கள் பொறுப்பாக இருந்து பார்த்தால், நிச்சியமாக நீங்கள் ஒரு நிமிடம் கூட பொறுத்துக்கொண்டிருக்க மாட்டீர்கள்.


பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளையும் பராமரித்துக் கொண்டு, சமைத்தல், துவைத்தல் என இன்னோறன்ன வீட்டுப் பணிகளையும் தனியாக செய்யும் பெண் ஒரு சாதாரண பெண்ணல்ல. மாறாக அவள் அற்புதங்கள் செய்து காட்டும் ஒரு வீர மங்கையாகும். 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.