நீர்கொழும்பு பிரதேச ஒருங்கிணைப்பு, கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்
- இஸ்மதுல் றஹுமான் -
அனுமதி இன்றி நீர்கொழும்பில் பல இடங்களில் பணம் வசூலிக்கும் வாகன தரிப்பிடங்களை நடாத்திச் செல்வதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக நீர்கொழும்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் நீர்கொழும்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ண தலைமையில் நீர்கொழும்பு இந்து இளைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீர்கொழும்பு பிரதேச செயலாளர், மாநகர ஆணையாளர், பொலிஸ் உயர் அதிகாரிகள், நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர், சுகாதார வைத்திய அதிகாரி, கல்விப் பணிப்பாளர் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தலைவர் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தலைமை உரையாற்றும் போது இது புதிய அரசாங்கத்தின் முதலாவது கூட்டம். கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு விசேட பிரதேசமாகும். நீர்கொழும்பு வாழ் மக்களின் எதிர்கால சுபீட்சத்தைக் கருத்தில் கொண்டு வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பழைய அரசியல் குரோதங்களை மறந்து மக்கள் இயக்கமாக சகலரும் ஒன்றினைந்து செயல்படவேண்டும். நாட்டுக்கான முன்மாதிரியை நீர்கொழும்பில் இருந்து ஆரம்பிப்போம் எனக் கேட்டுக்கொண்டார்.
வாகண தரிப்பிடம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கப்பட்ட போது நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் வாகண தரிப்பிடத்திற்காக பணம் வசூலிக்கப்பட்டு டிக்கட் வழங்கப்படுகின்றன. அதில் நகர அபிவிருத்தி அதிகாரசபை எனக்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
இது எவ்வாறு இடம்பெறுகின்றன. பணம் வசூலிக்க டென்டர் வழங்கப்பட்டுள்ளதா? அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டன.
சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள பகுதியிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பணம் அறவிடப்படுகின்றன என தெரிவித்த சிறைச்சாலை அத்தியட்சகர் இதனால் நீதிமன்றங்களில் இருந்து அழைத்துவரும் கைதிகள் தொடர்பாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகின்றன. சிறைச்சாலை நுழைவாயின் வழியின் இரு பக்கமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதனால் பாரிய அசெளகரியங்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
வாகண தரிப்பிடங்களை ஏற்படுத்தி பணம் அறவிட எந்த அனுமதியும் சம்பந்தப்பட்ட தரப்புகளினால் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க வாகன தரிபிடங்களை நினைத்தவாறு நடத்துவது தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்து சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் எமது எந்த அரசில் தலையீடும் இருக்காது எனக்கு கூறினார்.
பண்டிகை காலத்தில் பாதுகாப்பிற்காக சீறுடையிலும் சிவில் உடையிலும் பொலிஸார் ஈடு படுத்தப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு பிரிவினரும் புறம்பாக பாதுகாப்பு கடமையில் உள்ளதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment