Header Ads



தப்லீக் பணியில் கைதான இந்தோனேஷியர்கள்: நடப்பது என்ன..? நீதிமன்றில் அனல் பறந்த வாதம்


- எப்.அய்னா -


நுவ­ரெ­லியா பொலிஸ் பிரிவில், தப்லீக் பணி­களில் ஈடு­பட்­ட­தாக கூறி 8 இந்­தோ­னே­ஷி­யர்கள் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் சமூ­கத்­துக்கு மத்­தியில் பேசு பொரு­ளாக உள்­ளது. எனவே அந்த விட­யத்தின் முழு­மை­யான விப­ரங்­கள்­.


உண்­மையில் இலங்­கையில் 1950 களில் இருந்து தப்லீக் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக வர­லாறு கூறு­கின்­றது. இந்த பணிகள் முஸ்லிம் அல்­லது இஸ்­லா­மிய சமூ­கத்­துக்குள் மட்டும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. குறிப்­பாக ‘மர்கஸ்’ என்ற பெயரால் அறி­யப்­படும் மத்­திய நிலை­யத்தின் ஊடாக வலை­ய­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு இப்­ப­ணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக மர்கஸ் மத்­திய நிலையம் இலங்­கையின் பாரா­ளு­மன்றில் 1999ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்­டத்தின் ஊடாக கூட்­டி­ணைக்­கப்­பட்டு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு கட்­ட­மைப்பு என்­ப­தையும் இங்கு பதிவு செய்­தாக வேண்டும்.


இந்த தப்லீக் பணி­க­ளுக்­காக (பிர­சாரம்) இலங்­கையில் இருந்து வெளி­நா­டு­க­ளுக்கு முஸ்­லிம்கள் செல்­வதும், வெளி­நா­டு­களில் இருந்து முஸ்­லிம்கள் இங்கு வரு­வதும் காலா கால­மாக நடந்து வரும் ஒரு செயற்­பா­டாகும்.


இந்த நிலை­யி­லேயே குறித்த பணிகள் தொடர்பில் வந்­த­தாக கூறப்­படும் 8 இந்­தோ­னே­ஷி­யர்­களை பொலிஸார் கைது செய்­தமை அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.


இந்த சம்­பவம் தொடர்பில் பீ 12408/24 எனும் இலக்­கத்தின் கீழ் இந்த வழக்கு நுவ­ரெ­லிய நீதிவான் நீதி­மன்றில் முதல் தகவல் அறிக்கை ஊடாக (பி அறிக்கை) பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. நுவ­ரெ­லியா பொலிஸ் அத்­தி­யட்சர் பணி­ம­னையின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கே.எல்.எஸ். நிஷாந்த ஊடாக இந்த அறிக்கை நுவ­ரெ­லிய நீதிவான் பிர­புத்­திகா நாண­யக்­கா­ர­விடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.


அந்த பீ அறிக்கை பிர­காரம், கடந்த 2024.12.02 ஆம் திகதி நுவ­ரெ­லியா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் எச்.டி.டப்­ளியூ.பி.ஏ.டப்­ளியூ.ஜி.ஆர்.பீ.எச்.டப்­ளியூ.ஏ.பீ. ஹக்­மன, வயல சுற்­றுலா பிரி­வூ­டாக ஒரு தக­வலை எழுத்து மூலம் நுவ­ரெ­லிய பதில் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரன­துங்­க­வுக்கு அனுப்­பி­யுள்ளார். அந்த தகவல் குறித்தே உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கே.எல்.எஸ். நிஷாந்த தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.


அதன்­படி, மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க, நுவ­ரெ­லியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்­ளியூ.எஸ்.பி. டி சில்வா ஆகி­யோரின் மேற்­பார்­வையில் நுவ­ரெ­லியா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் எச்.டி.டப்­ளியூ.பி.ஏ.டப்­ளியூ.ஜி.ஆர்.பீ.எச்.டப்­ளியூ.ஏ.பீ. ஹக்­ம­னவின் அறி­வு­றுத்­தலின் கீழ் இந்த விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டுள்­ளன.


பொலிஸ் தரப்பில் கூறப்­படும் தக­வல்கள் பிர­காரம், உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கே.எல்.எஸ். நிஷாந்த தலை­மை­யி­லான குழு­வினர் குறித்த விடயம் மற்றும் இடம் தொடர்பில் முன்­னெ­டுத்த தேடல்­களின் பின்னர் சில விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதா­வது 8 வெளி­நாட்­ட­வர்கள் கொண்ட குழு நுவ­ரெ­லியா அல் கபீர் ஜும் ஆ பள்­ளி­வா­சலில் தங்கி இருப்­பதும் அவர்கள் 2024 நவம்பர் 29 ஆம் திகதி நுவ­ரெ­லியா பொலிஸ் வலய அதி­கார எல்­லைக்குள் வந்­தி­ருப்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது. முதலில் அவர்கள் ஹாவ எலிய மஸ்ஜித் ராசித் பள்­ளி­வா­ச­லுக்கு வந்துள்­ளதும் அங்­கி­ருந்தே நுவ­ரெ­லியா அல் கபீர் ஜும் ஆ பள்­ளி­வா­ச­லுக்கு வந்­த­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஷாந்த குழு­வினர் முன்­னெ­டுத்த ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய வந்துள்­ளது.


அதன்­படி இந்த 8 பேரும் இந்­தோ­னே­ஷி­யர்கள் என பொலிஸார் கண்­ட­றிந்­த­தாக பொலிஸ் தரப்பில் கூறப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் இவர்­க­ளுக்கு பொறுப்­பா­ள­ராக நுவ­ரெ­லி­யாவை சேர்ந்த மொஹம்மட் பளீல் தீன் என்­பவர் இருந்­த­தா­கவும், முதலில் அவ­ரது வாக்கு மூலத்தை பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரண­துங்க ஊடாக பதிவு செய்­த­தா­கவும் பொலிஸார் கூறு­கின்­றனர். இதன்­போது இவ­ருக்கு இந்­தோ­னே­ஷிய பிர­ஜைகள் பயன்­ப­டுத்தும் மொழி தொடர்பில் பரந்த அறிவு காணப்­ப­டு­வ­தாக தெரி­ய­வந்­த­தாக கூறும் பொலிஸார், அவரின் உத­வி­யோடு 8 இந்­தோ­னே­ஷிய பிர­ஜை­களின் வாக்கு மூலங்கள் பின்னர் பதிவு செய்­யப்­பட்­ட­தாக தெரி­வித்­தனர்.


இதன்­போது முதலில் இலங்­கையில் தங்­கி­யி­ருக்க அவர்­க­ளிடம் செல்­லு­ப­டி­யான வீசா இருக்­கின்­றதா என பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரண­துங்க வின­வி­ய­தா­கவும் இதன்­போது எவரும் செல்­லு­ப­டி­யான வீசாவை பொலி­ஸா­ரிடம் சமர்ப்­பிக்க தவ­றி­ய­தா­கவும், இதனை தொடர்ந்து அவர்­க­ளது கடவுச் சீட்­டுக்­களை கோரிய போது அவற்­றையும் முன் வைக்க அவர்கள் தவ­றி­ய­தா­கவும் பொலிஸார் நீதி­மன்­றுக்கு சமர்ப்­பித்த முதல் தகவல் அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.


இத­னை­ய­டுத்து பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரண‌­துங்க, இலங்கை தீவில் தங்­கி­யி­ருக்க செல்­லு­ப­டி­யான வீசா மற்றும் கடவுச் சீட்டு இல்­லாமை தொடர்பில் குற்­றச்­சாட்டு விளங்­கப்­ப­டுத்­தப்­பட்டு இந்த 8 இந்­தோ­னே­ஷிய பிர­ஜை­களும் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் கூறு­கின்­றனர். கடந்த டிசம்பர் 3 ஆம் திக­தி­யி­டப்­பட்ட நீதி­மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பொலி­ஸாரின் அறிக்கை பிர­காரம் இந்த 8 பேரில் 58 வய­து­டைய 4 பேரும், 57,65,61 மற்றும் 28 வய­து­களை உடை­யோரும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இவர்கள் கடந்த ஒக்­டோபர் 4 மற்றும் 5 ஆம் திக­தி­களில் இலங்­கைக்கு வந்­துள்­ள­தாக அவ்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.


அதன்­படி 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் மூன்றாம் பிரிவின் 10 (அ) (ஆ) அத்­தி­யா­யங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிய­மங்கள் மற்றும் கட்­ட­ளை­களை மீறி இலங்­கையில் தங்­கி­யி­ருந்­தமை ஊடாக 1993ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கம் மற்றும் 1998 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்கம், 2006 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சட்­டங்கள் ஊடாக திருத்­தப்­பட்ட 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 45 (1) (அ) அத்­தி­யா­யத்தின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக பொலிஸ் தரப்பில் கூறப்­பட்­டுள்­ளது.


பொலிஸார் இது தொடர்பில் நீதி­மன்­றுக்கு சமர்ப்­பித்­துள்ள அறிக்கை பிர­காரம், பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரண­துங்க குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் தர்கா நகர், கிந்­தோட்டை, நுவ­ரெ­லியா ஆகிய பகு­தி­களைச் சேர்ந்த மேலும் மூவரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­ட­தா­கவும் அவற்றின் ஊடாக இந்த குழு­வினர் இலங்­கையின் பல பகு­தி­களில் பிர­சங்­க­ங்களை முன்­னெ­டுத்­தமை தெரி­ய­வந்­த­தா­கவும் கூறப்­பட்­டுள்­ளது. எனினும் அது தொடர்பில் சட்டப் பிரி­வுகள் எவை ஊடா­கவும் குற்ற‌ம் சுமத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.


அத்­தோடு இந்த குழு­வினர் நாட்­டுக்கு ஏதேனும் நிலை­யான காரணி ஒன்­றினை மையப்­ப‌­டுத்தி வந்­தார்­களா அல்­லது வேறு கார­ணி­க­ளுக்­காக வந்­தார்­களா என்­பது குறித்து விசா­ரிப்­ப­தா­கவும், மேல­திக விசா­ர­ணை­களில் இவர்கள் ம‌த போத­னை­களில் ஈடு­பட்­டமை தெரி­ய­வந்­த­தா­கவும் பொலிஸார் நீதி­மன்­றுக்கு அளித்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. இவர்­க­ளது போத­னைகள் ஏனைய மதங்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக இருந்­ததா என மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் அந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.


இது தொடர்பில் நீதிவான் பிர­புத்­திகா நாண­யக்­கார வழக்­கா­வ­ணத்தில் இட்­டுள்ள பதி­வு­களின் பிர­காரம், குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 45 (1) (அ) பிரிவின் கீழ் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள பின்­ன­ணியில் அச்­சட்­டத்தின் 47 (1) அத்­தி­யாயம் பிர­காரம் பிணை­ய­ளிக்க முடி­யாது எனவும் இவர்கள் தொடர்பில் தேசிய பாது­காப்­புடன் தொடர்­பு­பட்டு விசா­ரணை நடப்­ப­தாக பொலிஸார் கூறு­வதால் பிணை கோரிக்­கையை நிரா­க­ரிப்­ப­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


இது தான் நுவ­ரெ­லி­யாவில் கைது செய்­யப்­பட்ட 8 இந்­தோ­னே­ஷி­யர்கள் தொடர்பில் பொலிஸ் தரப்பு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் முழு­மை­யான பொலிஸ் தரப்பு நியா­யங்­களும், நீதி­மன்ற உத்­த­ர­வு­மாகும்.


இவை எந்­த­ளவு தூரம் நியா­ய­மா­னது அல்­லது இவர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க முன் வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களில் உண்மைத் தன்மை தொடர்பில் நாம் இங்கு ஆராய வேண்டி இருக்­கின்­றது. ஏனெனில் இது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் அல்­லது பள்­ளி­வாசல் ஒன்றில் ஒன்­று­கூடும் எவர் மீதும் சந்­தே­கத்தை தோற்­று­வித்து முஸ்லிம் சமூ­கத்தை மீண்டும் கவ­லை­க­ளுக்குள் ஆழ்த்­தி­விடும் சம்­ப­வ­மாக மாறி­விடக் கூடாது.


உண்­மையில் இந்த 8 இந்­தோ­னே­ஷி­யர்­களும் தப்லீக் பணிக்­காக வந்­த­வர்கள். அவ்­வாறு தப்லீக் பணிக்­காக வந்­த­மையால் அவர்­களை பொலிஸார் கைது செய்­த­தாக பதி­வு­களில் இல்லை. பொலிஸார் நீதி­மன்றில் முன் வைத்­துள்ள பீ அறிக்கை பிர­காரம் பார்க்கும் போது அதில் இருக்கும் குற்­றச்­சாட்டு செல்­லு­ப­டி­யான வீசா, கடவுச் சீட்டு இல்லை என்­ப­தாகும். ஆனால் அக்­குற்­றச்­சாட்டு தொடர்பில் முதல் சந்­தர்ப்­பத்­தி­லேயே நீதி­மன்றில் விட­யங்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன. 2025 ஜன­வரி 2 ஆம் திக­தி­வரை செல்­லு­ப­டி­யான வீசா மற்றும் கடவுச் சீட்டு அவர்­க­ளிடம் இருப்­ப­தாக விட­யங்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளது என நீதி­வானே தனது குறிப்பில் பதி­விட்­டுள்ளார்.


உண்­மையில் இலங்­கையில் இது­வரை தப்லீக் பணிக்­காக வருகை தரும் வெளி­நாட்­ட­வர்­க­ளாக இருக்­கலாம் அல்­லது இங்­கி­ருந்து வெளி­நா­டு­க­ளுக்கு அப்­ப­ணிக்­காக செல்­ப­வர்­க­ளாக இருக்­கலாம், அனை­வரும் சுற்­றுலா வீசா­வையே பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். அரசு மற்றும் பாது­காப்பு தரப்­புக்கு அனைத்து விட­யங்­களும் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்­ன­ரேயே வெளி­நாட்­ட­வர்கள் தப்லீக் பணிக்­காக இலங்­கைக்கு வரு­கின்­றனர். இந்த நட­வ­டிக்­கைகள் சட்ட ரீதியில் எழுத்­துரு வடிவில் இல்­லா­விட்­டாலும், இணக்­கப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் காலா­கா­ல­மாக நடந்து வரும் செயற்­பா­டாகும். முஸ்­லிம்கள் மட்­டு­மன்றி ஏனைய மதங்­களை சார்ந்­த­வர்­களும் அவர்­க­ளது மத அனுஷ்­டானங்கள் தொடர்­பி­லான பய­ணங்­களை சுற்­றுலா வீசாக்கள் மூலமே முன்­னெ­டுக்­கின்­ற‌னர்.


இதற்கு முன்னர் 1976 ஆம் ஆண்டு வெளி­நாட்­ட­வர்கள் இவ்­வாறு தப்லீக் பணிக்­காக வரு­வதை தடுக்கும் நட­வ­டிக்­கைகள் பதி­வ­ாகி­யுள்­ளன. அப்­போது முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட், முன்னாள் பிர­தமர் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­க­வுடன் கலந்து­ரை­யாடி விஷேட ஏற்­பா­டு­களை செய்­தி­ருந்தார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்­சி­யாக சுற்றுலா வீசாவில் தப்லீக் பணிக்­காக வெளி­நாட்­ட­வர்கள் வந்து சென்­றுள்­ளனர். அதன்­படி 1996 இல் புத்­த­ளத்தில் நடாத்­தப்­பட்ட தப்லீக் இஜ்திமா வர­லாற்றில் முக்­கி­ய­மா­னது. இப்­போது இலங்­கை­யர்கள் உலகின் சுமார் 100 நாடு­க­ளுக்கு தப்லீக் பணி­க­ளுக்­காக சென்று வரு­கின்­றனர்.


இது­வ­ரையில் தப்லீக் பணிக்­காக‌ நாட்­டுக்கு வரும் எவரும் நாட்டு சட்­டத்தை மீறி­ய­தா­கவோ, குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தை மீறி­ய­தா­கவோ பதி­வு­களை காண முடி­ய­வில்லை.


வெளி­நாட்­டி­லி­ருந்து வருவோர் இங்கு தப்லீக் பணி­களை முன்­னெ­டுக்கும் போது அவர்­க­ளுக்கு சில வழி­காட்­டல்கள் உள்­ளன. அவர்கள் முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருடன் மட்­டுமே இங்கு கருத்து பரி­மாற்­றல்­களை முன்­னெ­டுப்­பதும் அவர்கள் பிர­சா­ரங்­களை செய்­வதில் இருந்து தவிர்ந்து பெரும்­பாலும், உள்­ளூர்­வா­சி­க­ளுடன் சேர்ந்து மக்­களை பள்­ளியின் பால் அழைக்கும் நட­வ­டிக்­கை­களை மட்­டுமே முன்­னெ­டுப்­ப­தாக பதி­வுகள் உள்­ளன. அத்­துடன் பெரும்­பாலும் வெளி­நாட்­ட­வர்கள் தப்லீக் பணி­க­ளுக்­காக வரு­வது, அவர்கள் சார் மார்க்க விட­யங்­களில் அறி­வினை விருத்தி செய்­து­கொள்­வதை அடிப்­ப­டை­யாக கொண்­ட­தா­கவே அமைந்­தி­ருக்கும் என கூறப்­ப‌­டு­கின்­றது.


இவ்­வா­றான நிலையில், பொலி­ஸாரின் நட­வ­டிக்­கைகள் அல்­லது தொடர்ந்து அவர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க எடுக்­கப்­ப‌டும் நட­வ­டிக்­கைகள் சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற‌ன.


குறிப்­பாக இலங்­கையில் சுற்­றுலா வீசாவில் வருவோர் மத பிர­சா­ரங்­களில் ஈடு­பட முடி­யாது. அவ்­வாறு மத பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டு­வ­தானால், மத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் தனி­யாக வீசா பெற வேண்டும்.


ஆனால் இங்­குள்ள நிலைமை வேறு. சுற்­றுலா வீசாவில் வருவோர், மத நட­வ­டிக்கை வீசாவில் வருவோர் முன்­னெ­டுக்க முடி­யு­மான செய­ல­மர்­வுகள், பிர­சார கூட்­டங்கள் போன்­ற­வற்றை செய்ய முடி­யாது. எனினும் அவர்­க­ளுக்கு மக்­களை சந்­திப்­பது, பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்­வது, வணக்க வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வது போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எந்த தடையும் இல்லை என சட்ட வல்­லு­நர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.


ஆனால் இங்கு ஒரு முக்­கி­ய­மான ஒரு விட­யத்தை குறிப்­பிட வேண்டும். அதா­வது நுவ­ரெ­லிய பொலிஸார் கைது செய்த 8 இந்­தோ­னே­ஷி­யர்கள் தொடர்­பிலும், அவர்­க­ளது பெயர், கடவுச் சீட்டு இலக்கம் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளையும் உள்­ள­டக்கி 2024 ஒக்­டோபர் 22 ஆம் திக­தியே மர்கஸ் இஸ்­லா­மிய நிலையம் ஊடாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள கட்­டுப்­பாட்­டா­ள­ருக்கு கடிதம் ஊடாக அனைத்து விட­யங்­களும் முன் வைக்­கப்­பட்டே வீசா பெறப்­பட்­டுள்­ளது. அந்த கடி­தத்தில் மிகத் தெளி­வாக இவர்கள் ‘சன்­மார்க்க சுற்­றுலா’ தொடர்­பி­லேயே வரு­வ­தாக குறிப்­பிட்டு அதற்­கா­கவே வீசாவும் பெறப்­பட்­டுள்­ளது.


இவ்­வா­றான பின்­ன­ணி­யொன்று காணப்­ப‌டும் நிலையில் தான் கடந்த திங்­க­ளன்று, இந்த விவ­கார வழக்கு நுவ­ரெ­லியா நீதிவான் பிர­புத்­திகா நாண­யக்­கார முன்­னி­லையில் நகர்த்தல் பத்­திரம் ஊடாக விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டது. சட்­டத்­த­ரணி ஷஹ்மி பரீட் தாக்கல் செய்த நகர்த்தல் பத்­தி­ரத்­துக்கு அமைய கடந்த திங்­க­ளன்று (9) சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான வஸீமுல் அக்ரம், ஷஹ்மி பரீட், சிந்­தக்க மக­நா­ராச்சி, சந்­தீப கம எத்தி ஆகியோர் ஆஜ­ராகி வாதங்­களை முன் வைத்­தனர்.


அதன்­படி சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் இந்த விவ­கா­ரத்தில் முன் வைத்த வாதங்கள் முக்­கி­ய­மா­னவை. அவ­ரது வாதங்கள் சட்ட ரீதி­யி­லான விட­யங்­களை அல­சு­வ­தாக அமைந்­தி­ருந்­தது. அதன்­படி குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் பிர­காரம், பொலிஸார் கூறு­வதைப் போல இந்­தோ­னே­ஷி­யர்­களை கைது செய்ய பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அத்­தி­யாயம் தொடர்பில் மிக விரி­வாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் விட­யங்­களை முன் வைத்து, அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்­கொன்­றினை கொண்டு செல்ல முடி­யாது எனும் வாதத்தை முன் வைத்தார்.


‘இந்த சந்­தேக நபர்கள் அனை­வரும் இந்­தோ­னே­ஷி­யர்கள். உல­க­ளவில் ஆன்­மீக சுற்­றுலா எனும் ஒரு கட்­ட­மைப்பு உள்­ளது. அதன்­ப­டியே இவர்கள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர். இவர்கள் எந்த வீசா விதி மீறல்­க­ளையும் செய்­ய­வில்லை.


நுவ­ரெ­லி­யா­வுக்கு வரு­வ­தற்கு முன்னர் அவர்கள் பல்­வேறு இடங்­க­ளுக்கு சென்­றனர். நுவ­ரெ­லி­யா­வுக்கு அவர்கள் வருகை தந்­த­மைக்கும் காரணம் உள்­ளது. 1974 ஆம் ஆண்டில் 182 ஹஜ் பய­ணிகள் உள்­ளிட்ட 191 பேர் ஒரு விமான விபத்தில் உயி­ரி­ழந்­தனர். மக்கா நகர் நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த இந்­தோ­னே­ஷி­யர்­களை தாங்­கிய விமா­னமே இவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­னதில் அவர்கள் அனை­வரும் உயி­ரி­ழந்­தனர். நுவ­ரெ­லி­யா­வுக்கு மிக அண்­மித்த பகு­தியில் இந்த இடம் அமைந்­துள்ள நிலையில் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி அதன் 50 வருட பூர்த்தி தின­மாக இருந்த நிலை­யி­லேயே அதனை மையப்­ப‌­டுத்தி இந்த இந்­தோ­னே­ஷி­யர்கள் நுவ­ரெலி­யா­வுக்கு வருகை தந்­துள்­ளனர்.


இலங்­கையில் உள்ள பள்­ளி­வா­சல்­க­ளோடு மிக நெருக்­க­மான வலை­ய­மைப்­பொன்று இருக்கும் பின்­ன­ணி­யி­லேயே, கொழும்பில் உள்ள ‘மர்கஸ்’ ஊடாக அவர்கள் நுவ­ரெ­லி­யா­வுக்கு வந்து அங்­குள்ள பள்­ளி­வாசல் ஊடாக இந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.


இது சட்ட விரோ­த­மா­னது அல்ல. இவர்கள் இலங்­கையின் சட்ட ரீதி­யி­லான விமான நிலையம் ஊடாக நாட்­டுக்குள் உரிய முறையில் வந்­த­வர்கள். அவர்­களின் கடவுச் சீட்­டுக்கள், வீசா என்­பன உள்­ளன. எனவே குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 10 ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் குற்றம் ஒன்று வெளிப்­ப­ட­வில்லை. எனினும் பொலிஸார் இவர்­களை குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 45 (1) (அ) பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­த­தாக கூறி நீதி­மன்றில் ஆஜர் செய்­துள்­ளனர்.


உண்­மையில் குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 45 (1) (அ) பிரிவின் கீழ் ஒரு­வரை கைது செய்யும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்­பது அதே சட்­டத்தின் 48 ஆவது அத்­தி­யா­யத்தில் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. அதன்­படி, அவ்­வாறு கைது செய்­யப்­ப‌­டு­வோ­ருக்கு அவர்­க­ளது நிர­ப­ராதித் தன்­மையை உறு­திப்­ப­டுத்த 14 நாட்கள் வரை கால அவ­காசம் வழங்­க­ப்படல் வேண்டும். அதா­வது குறித்த விடயம் தொடர்பில் அமைச்­ச­ரிடம் இருந்து ஏதும் விஷேட ஆலோ­ச­னைகள் இல்­லாத போது, குடி­வ­ரவு குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டா­ள‌­ருடன் கதைத்து 14 நாட்கள் அவர்­களை தடுத்து வைக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதற்­கா­கவே மிரி­ஹா­னையில் உள்ள தடுப்பு முகாம் போன்­றவை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அந்த 14 நாட்­களில் அவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் தமது நிர­ப­ராதித் தன்­மையை நிரூ­பிக்­கா­விட்டால் அதன் பின்னர் நீதி­மன்றில் ஆஜர் செய்ய முடியும்.


உண்­மையில் குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 45 (1) (அ) பிரிவின் கீழ் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப‌­டுத்­தப்­ப‌டும் சந்­தேக நபர் ஒரு­வ­ருக்கு பிணை­ய­ளிப்­பது தொடர்பில் இதே சட்­டத்தில் விதி­வி­தா­னங்கள் உள்­ள‌ன. குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்­துக்கு 2006 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட திருத்­தங்கள் பிர­காரம் பிணை வழங்கும் அதி­காரம் நீதி­வா­னுக்கு உள்­ள‌து.


இவ்­வா­றான பின்­ன­ணியில் இந்த 8 இந்­தோ­னே­ஷி­யர்கள் குறித்­தான விடயம் தற்­போது இராஜ தந்­திர மட்­டத்தில் பேசு பொரு­ளா­கி­யுள்­ளது. அதே நேரம் பொலிஸ் ஆணைக் குழு இது குறித்து அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது. உள­வுத்­து­றைகள் ஆராய்ந்­துள்­ளன. எனக்­குள்ள தக­வல்கள் படி அத்­தனை பேரி­னதும் ஆராய்­வு­களின் பின்னர் இந்த சந்­தேக நபர்­களை விடு­விப்­பதில் எவ­ருக்கும் ஆட்­சே­பனம் இல்லை என்றே எனக்கு அறியக் கூடி­ய­தாக உள்­ளது. எனவே இவர்­களை விடு­விக்க உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரு­கின்றேன். சில நேரம் அவர்­களை விடு­விப்­பது தொடர்பில் நீதி­மன்ற‌ம் உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்க விரும்­ப­வில்லை எனில், பொருத்­த­மான பிணை நிபந்­த­னை­க­ளுடன் அவர்­களை பிணையில் செல்ல அனு­ம­திக்­கு­மாறு கோரு­கின்றேன்.’ என சிரேஷ்ட சட்டத்தரணி   வாதிட்டார்.


இந்த நிலையில் இது குறித்து தீர்மானத்தை அறிவித்த நீதிவான் பிரபுத்திகா நாணயக்கார, பொலிஸார் இந்த 8 இந்தோனேஷிய‌ர்கள் தொடர்பிலும் எழுத்து மூல ஆவணம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளதாகவும், அதில் சுற்றுலா வீசாவில் வந்து மத பிரசாரம் மற்றும் பிரசங்கங்களில் ஈடுபட முடியது எனவும் அது தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


அதனால் சந்தேக நபர்களை விடுவிக்க முடியாது எனவும், தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அவர்கள் புரிந்துள்ள‌தாக நீதிமன்றிடம் விடயங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


சந்தேக நபர்கள் இலங்கையர்கள் அல்லர் மற்றும் அவர்களுக்கு நிரந்தர வதிவிடம் நாட்டில் இல்லாமை போன்ற‌ விடயங்களை கருத்தில் கொண்டு அவர்களை வழக்கு நடவடிக்கைகளுக்கு அழைத்துக்கொள்வதில் உள்ள சிரமத்தை கையப்ப‌டுத்தி பிணையை மறுத்ததாக குறிப்பிட்ட நீதிவான், விள‌க்கமறியல் உத்தரவினை மாற்றப் போவதில்லை எனவும் இவர்களுக்கு எதிராக விசாரணையை நிறைவு செய்து குற்றப் பத்திரிகையை அடுத்த தவணை திகதியில் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும், அதன் பின்னர் வழக்கை நிறைவு செய்துகொள்ள சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவித்தார்.


- Vidivelli -

No comments

Powered by Blogger.