Header Ads



வாள்வெட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு


வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர்.


இச்சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த 46 வயதான செல்வநிரோயன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளர்


குறித்த சம்பவம் இன்று (01) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,


இன்று மாலை குறித்த பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையினவே உயிரிழநது விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


வவுனியா விசேட நிருபர்

No comments

Powered by Blogger.