Header Ads



யேமனில் இருந்து, இஸ்ரேலலை தாக்க பாய்ந்துவந்த ஏவுகணை


ஹவுதி அமைப்பினால் ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையினால் மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ஒரு மாதத்திற்கு பிறகு முதல் முறையாக இன்று (16) குறித்த பகுதியில் இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், இந்த ஏவுகணை நாட்டின் எல்லையை கடக்கும் முன் வான் பாதுகாப்பு மூலம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.


அத்தோடு, ஹவுதிக்களின் இந்த ஏவுகணை இடைமறிக்கப்பட்டதை தொடர்ந்து, துண்டுகள் விழும் என்ற அச்சத்தில் மத்திய இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.


தகவல்களின்படி, இடைமறிக்கப்பட்ட துண்டுகள் வடக்கு மேற்குக் கரையில் விழுந்துள்ளதுடன் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


இதன்போது, டெல் அவிவ், ஹோலோன், ரிஷோன் லெசியன், பெட்டா டிக்வா, ரமட் கான், ஹெர்ஸ்லியா மற்றும் வடக்கு மேற்குக் கரையில் உள்ள பல குடியிருப்புகள் உட்பட சுற்றியுள்ள பல பகுதிகளில் சைரன்கள் முழங்கின.

No comments

Powered by Blogger.