பாராளுமன்றத்தில் பிறப்புச் சான்றிதளுடன் சஜித், உணர்வு பூர்வமாக கூறிய விடயங்கள்
எனது கல்வித் தகைமைகளுக்கு சவால் விடுத்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவும், நான் சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெறவில்லை என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரம் மற்றும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முகமாக முன்னெடுக்கப்படும் சேறுபூசும் நடவடிக்கைகளுக்கு இன்று(18) பதிலளித்தேன்.
நாளுக்கு நாள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சேறும் நடவடிக்கைகளுக்கு உரிய பதிலடியாக எனது கல்விச் சான்றிதழ்கள் சகலதையும் இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தேன். ஆரம்பக் கல்வி முதல் தற்போதைய பிரதமர் கற்பிக்கும் திறந்த பல்கலைக் கழகத்தின் முதுமாணி கற்கை வரையிலான அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். நான் கல்வி கற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக சகல குடிமகனாலும் பரிசீலித்துப் பார்க்க முடியும். நான் போலியான கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது நிரூபிக்கப்பட்டால், எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி போலவே அரசியலில் இருந்தும் விலகுவேன்.
நான், எனது பிறப்புச்சான்றிதழையும் எடுத்துவந்தேன். யாராவது கேள்வி கேட்பார்கள் என்று நினைத்துதான் அவ்வாறு எடுத்துவந்தேன் என்றார்.
Post a Comment