பன்றியின் சேறு பட்டுவிடும் என்பதற்காக, நாங்கள் ஒதுங்கி போனோம்
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, அண்மையில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளின் முறை பிழையானது. நடந்து கொண்ட முறையும் பிழையானது. அதனை கூட்டத்தை தலைமை தாங்கியவர்கள் உரிய முறையில் நெறிப்படுத்தவில்லை. அல்லது ஏதாவது உள்நோக்கத்துடன் அவர்களும் அதற்கு துணை போனார்களோ தெரியாது. சிலவேளைகளில் அவர்களுக்கு அனுபவம் இல்லாதமையும் காரணமாக இருக்கலாம்.
இங்கு கல்வி தகமை என்பதனை விட அனுபவமும் மக்கள் நலன் சார்ந்த சிந்தனை உடையவர்களுமே தேவை.
அன்றைக்கு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் ஒரு மூத்த அதிகாரியுடன் பேசிய போது அவர் எனக்கு கூறினார், சேற்றில் குளித்து விட்டு வரும் பன்றியை பார்த்து யானை ஒதுங்கி போனது , பன்றிக்கு பயத்தில் இல்லை. தன் மீது பன்றியின் சேறு பட்டு விடும் என்பதற்காக , அதே போல தான் அன்றைக்கும் நாங்கள் ஒதுங்கி போனோம் என்றார்.
எழுப்பப்பட்ட கேள்வி முறை பிழை என்பதால் தான் அதிகாரிகள் பதில் சொல்லவில்லை என மேலும் தெரிவித்தார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
Post a Comment