Header Ads



அந்த ரஹ்மானின் கைவண்ணம்


இந்த விமானியறைப் படத்தை நீங்கள் என்றாவது நன்கு அவதானித்துண்டா?


அதிலே பாருங்கள்! நாம் வானில் பறக்க வேண்டும் என்பதற்காக எத்துனை எத்துனை பெரிய, இடியாப்பச் சிக்கலான மீட்டர் கருவிகள், அளவை மானிகள், மற்றும் திரைக் காட்சிகள், கண் புடைக்கவைக்கும் காட்சிகள் காணப்படுகிறன!


சிட்டுக்குருவி தொட்டு புறாக்கள், கிளி, மைனா என்று வானுயரப் பறக்கும் கழுகு வரை அனைத்துப் பறவைகளையும் சற்று கற்பனை செய்து பாருங்கள்!


அவைகளின் மூளையில் இருப்பது வெறும் ஒரு தர்பூசணி விதையளவான  சின்னஞ்சிறிய ஒரு பகுதிதான். அதற்குள்தான்  கடுஞ்சிக்களான முடிச்சுகள்நிறைந்த இந்த அளவை மீட்டர்கள், திறைகள் எல்லாம் உள்ளன. தெரியுமா?


வேகக் கட்டுப்பாடு, உயர்த்துதல், தாழ்த்துதல், பாரம், சுமை, கனதி, திக்குத்திசைகள், திசைகாட்டிகள், நேரசூசிகள், விரோதிகளிடமிருந்து தற்காத்து விரண்டோடுவதற்கான சமிக்கைகள் மற்றும் அவைகளுக்கன இரைகளக் கண்டறியும் ராடர்கள், தரை இறக்கும் மீட்டர்கள், உயரப் பறக்கும் மீட்டர்கள்  என எல்லாம் பறவையின் அந்த சிறு மூளையில்தான் அமையப்பெற்றுள்ளன.


இத்தனைக்கும் அவைகளுக்கு கட்டுப்பாட்டு கோபுரம், வயர்லெஸ் முறைகள், செய்மதிகள், செயற்கைக்கோள், ஜீ பீ எஸ் என நவீனமறிந்த எந்த வசதிகளும் இல்லை. 


இப்படியிருக்க, ஒரு நாத்திகன், கடவுள் மறுப்பாளன்   வந்து இத்தனையும் தற்செயலான நிகழ்வுகள், பறைவைகள் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளன! மனிதன் குரங்கிலிருந்து வந்தான்! என்று வாதிட கிளம்பி வந்துவிடுகிறான். 


'இறக்கைகளை விரித்துக்கொண்டும்    மடக்கிக்கொண்டும் அவர்களுக்கு மேல்   (ஆகாயத்தில் அணியணியாகப் பறக்கும்) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அந்த ரஹ்மானையன்றி வேறு யாரும் அவைகளை பிடித்தியக்கவில்லை. "


எல்லாம் அந்த ரட்சகனின் கைவண்ணம்! 


யாவற்றையும் படைப்பதில்  கைதேர்ந்தவன் அவன்!


✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.