ஹமாஸை, ஹிஸ்புல்லாவை தோற்கடித்து, அசாத் ஆட்சியை வீழ்த்தி, ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துவிட்டோம் - இஸ்ரேல்
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறித்த பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இந்த நாட்களில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.
நாங்கள் ஹமாஸை தோற்கடித்து விட்டோம். ஹிஸ்புல்லாவை தோற்கடித்தோம், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டோம். உற்பத்தி முறைகள், சிரியாவில் அசாத் ஆட்சியை வீழ்த்தி விட்டோம், கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளோம்.
மேலும், ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பு, எங்கள் கடுமையான தாக்குதலின் வரிசையில் கடைசியாக நிற்கிறது” என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 31ஆம் திகதி அன்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தெஹ்ரான் சென்றிருந்த போது ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.
ஈரானிய மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் இந்த படுகொலைக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டிய போதும் இஸ்ரேலிய அதிகாரிகள் அதன் பற்றி உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
இந்நிலையில், தற்போது, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக குறித்த கொலையை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment