Header Ads



முனீர் முளப்பர் அமைச்சராகிறாரா..? சில தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்


தற்போதைய அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை  பிரதி அமைச்சருமான முஹம்மட் முனீர் முலஃபர் நியமிக்கப்படவுள்ளதாக சில தமிழ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


மேலும் அவர் சமூக ஒருங்கிணைப்பு துறைக்கு கபினட் அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


தற்போதைய அரசாங்கத்தில் இதுவரை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் எவரும் இருக்கவில்லை.


அந்த இடைவெளியை நிரப்புவதே புதிய நியமனத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


அநுர அரசில் முஸ்லிம் அமைச்சர் எவரும் நியமிக்கப்டாததை அடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.   

No comments

Powered by Blogger.