இனி எதிர்காலம் நம்முடையதுதான், பின்வாங்க இடமில்லை - அல்ஷாம் தலைவர் ஹயத் தஹ்ரிர்
'இனி எதிர்காலம் நம்முடையதுதான்'' என்று கூறியுள்ள `ஹயத் தஹ்ரிர் அல் ஷாம்' தலைவர் பின்வாங்குவதற்கு "இடமில்லை" என்று கூறியுள்ளார்.
இஸ்லாமிய ஆயுதக் குழுவான`ஹயத் தஹ்ரிர் அல் ஷாம்' அமைப்பின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி சிரியாவின் அரசுத் தொலைக்காட்சியில் இதைக் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
'மோசமான ஆட்சியாளர்' அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் எனக் கூறியுள்ள கிளர்ச்சிப் படைகள், நாடு 'விடுவிக்கப்பட்டது' எனவும் அறிவித்துள்ளன.
சிரியாவில் அசாத் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாகவும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் கிளர்ச்சிக் குழுவின் தலைவர்கள் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் மற்றும் வானொலியில் அறிவித்தனர்.
1970களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வந்தது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி, ஆட்சி மாற்றம் நடைபெறும் வரை அனைத்து அரசு துறைகளும் பிரதமரின் மேற்பார்வையில் இருக்குமென தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சிரியாவின் பிரதமர் மொஹமத் காஸி அல்-ஜலாலி தான் டமாஸ்கஸில் இருப்பதாகவும், மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment