Header Ads



இனிமேல் அப்படி கூறப்போவதில்லை - விடுதலையானார் ஹிருணிகா


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று (04) உத்தரவிட்டது.


கல்கிஸ்ஸ நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பாக, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்தினை மீளப் பெறுவதாகவும், இனிமேல் அவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதில்லை என ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த மனு நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

No comments

Powered by Blogger.