Header Ads



எரிந்த கெப் வண்டியில் இருந்து சடலம் மீட்பு


எரிந்த கெப் வண்டியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மின்னேரிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.


ஹபரணை- பொலன்னறுவை பிரதான வீதிக்கும் பதுஓயாவிற்கும் இடையில் 38 ஆவது கிலோமீற்றர் மைல்கல்லுக்கு அருகில் எரிந்த கெப் வண்டியொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


ஹபரணை மின்னேரிய வீதியில் பயணித்த நபர் ஒருவர், வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிவதாக மின்னேரிய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து மின்னேரிய பொலிஸார் குறித்த கெப் எரிந்து கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.


புதன்கிழமை (25) இரவு 10 மணியளவில் தீ பரவியதாகவும், தீ பரவும் போது கெப் ஹபரணையை நோக்கி நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் வேறு யாரும் இருக்கவில்லை எனவும் மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர். ஒருவரைக் கொன்று அவரது சடலத்தை கெப்பியில் வைத்து தீ வைத்து எரிப்பதற்காகவே கெப் இந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மின்னேரியா பொலிஸாரும் பொலன்னறுவை மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளும் வந்து பெரும் முயற்சியில் தீயை முழுமையாக அணைத்தனர்.


தீப்பிடித்த கெப் வண்டி, கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான கெப் வண்டி என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.