Header Ads



யூடியூப்பை முடக்கியவரின் பதிவு


 யூடியூப்பில் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சேனல் தொடங்கி தோல்வி அடைந்ததால் பெண் ஒருவர் அனைத்து வீடியோக்களையும் நீக்கியுள்ளார்.


தற்போதைய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பெரும்பாலானோர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில், வெற்றி பெறுபவர்களும் உண்டு.


அந்தவகையில், நளினி உன்னாகர் என்ற பெண் ஒருவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி சமையல் தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார்.


அவர், கடந்த 3 ஆண்டுகளாக இதுவரை மொத்தம் 250 வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கிறார். மேலும், கமரா, மைக், கிச்சன் சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்காக சுமார் 8 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார்.


இந்நிலையில், தனக்கு அங்கீகாரமும், வருமானமும் கிடைக்கவில்லை என்று அனைத்து வீடியோக்களையும் நீக்கியுள்ளார்.


அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "யூடியூப் தளத்தில் கடந்த 3 வருடங்களாக 250க்கும் மேற்பட்ட வீடியோக்களை உருவாக்கினேன். இருப்பினும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.


எனவே வீடியோக்களை உருவாக்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். மேலும், அனைத்து வீடியோக்களையும் நீக்கிவிட்டேன் ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களுக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது.


எனவே அவற்றை முதன்மையான வருமான ஆதாரமாக நம்பாமல் இருப்பது புத்திசாலித்தனம்" என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  


No comments

Powered by Blogger.