Header Ads



முன்னாள் ஜனாதிபதிகளுக்காக இத்தனை செலவா..?

 
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அதில் மூன்றில் ஒரு பகுதியான 326 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக செலவிடப்படுவதாகவும் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதன் மூலம் அவரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.