Header Ads



ஆத்துமானந்தம் என்றும் இருக்கட்டும்...


உங்கள் இல்லங்களில் குழந்தைகளின் இரைச்சல் சத்தங்கள் கேட்டு நீங்கள் அதிர்ப்தி அடையாதீர்கள். 


குழந்தைகளின் அன்றாட சத்தங்களையும் சண்டைகளையும் கண்டு முகம் சுழிக்காதீர்கள். 


குழந்தைகளின் குறும்புத்தனங்களையும் கூக்குரல்களையும் ரசித்து வாழுங்கள். 


சாக்லேட்டுக்காவும் சாண்ட்விச்சுக்காவும் அவர்கள் அடித்துக்கொள்வதை, பிடித்துக் கொள்வதை  ரசித்து வாழுங்கள். 


கட்டில்களில் ஏறி மிதித்து விளையாடுவதையும், மெத்தையில் துள்ளிக் குதிப்பதையும் ரசித்து வாழுங்கள். 


அவர்கள் சவட்டி வைத்து அறைகளை ஒழுங்குபடுத்தும் போதும், அவர்கள் விளையாடி சிதறிய விளையாட்டுப் பொருட்களை ஒன்று சேர்க்கும் போதும் அவர்கள் சிந்திய சோத்து மணிகளை அள்ளும் போதும் மனதால் சலித்துக் கொள்ளாதீர்கள். 


அதிகாலையில் அவர்களை எழுப்பாடி, குளிப்பாட்டி ஆடைகள் அணிவித்து, தலை வாரி அலங்கரித்து பள்ளிக்கூடம் வழி அனுப்புவதையும், பின்னர் மாலையில் வரவேற்பதையும் ரசித்து வாழுங்கள். 


இராக்கல கதைகளை ரசித்து வாழுங்கள், பகல்கால ஒன்று கூடல்களை ரசித்து வாழுங்கள். 


நாளை ஒருநாள், நீங்கள் பார்த்திருக்க உங்கள் குழந்தைகள் வளர்ந்து, ஆளாவார்கள்.


பெண் பிள்ளைகள் பெருப்பதோடு அவர்களின் பெண்மை உணர்வும் பெருத்துவிடும். 


ஆண் பிள்ளைகள் பெருப்பதோடு அவர்களின் ஆண்மை உணர்வும் பெருத்துவிடும். 


ஒவ்வொருவரும் அவரவர் சொந்த புத்தியில் வாழ ஆரம்பிப்பார்கள். அவர்கள் விரும்பிய வழிகளில் ஒதுங்கிவிடுவார்கள். 


புதிய புதிய பாதைகளை அமைத்துக் கொள்வார்கள்.


ஒருவர் ஒருவராக வீட்டை விட்டும் புறப்பட ஆரம்பிப்பார்கள். 


ஒருவர் திருணம் முடித்து வெகு தூரம் சென்று விடுவார். 


மற்றொருவர் வெளிநாடு பயணாமாவார். 


இன்னொருவர் தன் கனவு நனவாகி, கரை சேர காத்திருப்பார்.


கலகலப்பாகவும் ஆரவாரமாகவும் இருந்த உங்கள் இல்லம் திடீரென ஆள் சஞ்சாரம் அற்றதாக மாறிவிடும். 


மிட்டாய்த் துண்டுக்காகவும், கட்டிலில் இடம் பிடிக்கவும் சத்தம் வந்த உங்கள் அறைகள் வெறிச்சோட ஆரம்பிக்கும். 


ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த உங்கள் சிட்டுக்கள் ஊர்விட்டு ஊராக நாடுவிட்டு நாடாக களைந்து சொல்லத் தொடங்குவார்கள். 


ஒரே விட்டில் குதூகலமாக ஓடிப்பிடித்து விளையாடியவர்கள், ஒரே தட்டில்  சண்டையிட்டு சாப்பிட்வர்கள் திடீரென உங்கள் வீட்டு விருந்தாளிகள் போல வந்திறங்குவார்கள். 


பின்னர் ஒரு நாள் வரும்,,,


நீங்கள் இருவரும் அதிகாலை வேளைகளிலும் அந்திப் பொழுதுகளிலும் உங்கள் வாசற்படிகளில் அமர்ந்திருப்பீர்கள். 


எந்தப் பிள்ளை எப்போது எங்கள் முகத்தை காண வருவார்களோ என ஏக்கத்துடன் காத்திருப்பீர்கள். 


ஆதலால் நாம் வாழும் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து வாழ்வோம். வாழ்ந்த காலத்தை ரசித்து வாழ்ந்தோம் என்ற ஆத்துமானந்தம் என்றும் இருக்கட்டும். 


வாழ்வை ரசித்து வாழ வாழ்த்துக்கள்!


✍ தமிழாக்கம் /  imran farook

No comments

Powered by Blogger.