Header Ads



மருந்தை அருந்திய, குழந்தை உயிரிழப்பு (எச்சரிக்கை சம்பவம்)


காலில் ஏற்பட்ட காயத்திற்காக தாய்க்கு கொண்டு வந்த வலிநிவாரணி மருந்தை அருந்திய 2 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.


புத்தளம் - கல்லடி பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு வயதும் ஏழு மாதமுமான எஸ்.ஏ.வினுக மண்டித் என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.


பெற்றோர்கள் பாராத வேளையில், திரவ வலிநிவாரணி மருந்தை குறித்த குழந்தை எடுத்து குடிக்க முயற்சித்துள்ள நிலையில், குழந்தையின் தந்தை அதனை அவதானித்து மருந்து போத்தலை குழந்தையிடம் இருந்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதன் பின்னர், பெற்றோர் குழந்தையை பாலாவியாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், குழந்தை வலிநிவாரணியை அருந்தியதன் காரணமாக மயக்கமடைந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.



மேலதிக சிகிச்சைக்காக குழந்தை முந்தலம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், கொழும்பு ரித்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் நோயாளர் காவு வண்டியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதனை தொடர்ந்து, இந்த மரணம் மெத்தில் சாலிசிலேட் எனப்படும் வலிநிவாரணியை உட்கொண்டதால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 


குழந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.