Header Ads



வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்


பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக்க ஜாகொட தெரிவித்துள்ளார்.


அதிக வேகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றமை போன்ற காரணங்களால் வீதி விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


வீதி விபத்துக்கள் தடுக்கப்படக்கூடிய ஒன்றாகும் எனவும், மக்கள் இது தொடர்பில் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


குறிப்பாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று விசேட வைத்தியர் இந்திக்க ஜாகொட தெரிவித்தார்.


வாகனங்களில் பயணிக்கும் போது முன் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் மாத்திரமே சீட் பெல்ட் அணிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எனினும், விபத்து ஏற்படும் போது, ​​சீட் பெல்ட் அணியாத பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கு விபத்துகளின் தீவிரம் மிக அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.