Header Ads



பெருந்தொகை பணத்துடன் இளைஞன் கைது


கொழும்பு - வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொலிங்வுட் பிளேஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது தெகிவளையைச் சேர்ந்த  26 வயதுடைய  இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார்.


குறித்த இளைஞரிடம் இருந்து பெருந்தொகை பணம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தேடுதல் நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் 19 இலட்சம் ரூபா பணம், மொபைல் போன், பணம் எண்ணும் இயந்திரம், இரண்டு வங்கி அட்டைகள் மற்றும் ஒரு மின்னணு தராசு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இதனையடுத்து சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய போதைப்பொருளுடன் மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளை சேர்ந்த 25 மற்றும் 24 வயதானவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைக்காக வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.