Header Ads



ரயில் பயணச்சீட்டு முன்பதிவில் மோசடி


 நீண்ட தூர சேவையில் ஈடுபடும் ரயில்களில் முன்பதிவு செய்து, பயணச்சீட்டை கொள்வனவு செய்வதிலும் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


சில குழுக்கள் ரயில் ஆசன முன்பதிவு பயணச்சீட்டுகளை இணையத்தளத்தில் கொள்வனவு செய்து பின்னர் அதிக விலைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்கின்றமை குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர், டொக்டர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.


இதனூடாக பயணிகளுக்கு பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த மோசடியில் ஈடுபட்டவர்களின் தொலைபேசி இலக்கங்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


அதற்கமைய, இந்த மோசடியுடன் தொடர்புடைய சகலரையும் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


முன்பதிவு செய்யப்பட்ட ஆசனப் பயணச் சீட்டுகள் தொடர்பான சோதனைகளை கடுமையாக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி அமைச்சர், டொக்டர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.