Header Ads



அபராதம் செலுத்திய பிரதியமைச்சர்


போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன, கடமையில் இருந்த அதிகாரிகள் வாகனத்தை விடுவிக்க முன்வந்த போதிலும், அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதற்காக அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.


அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருநாகல் பகுதியில் பிரதி அமைச்சரின் சாரதி அதிவேகமாக வாகனத்தை செலுத்தியமைக்காக பிடிபட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


அப்போது வாகனத்தில் இருந்த கலாநிதி குணசேன, அனைத்து குடிமக்களும் நாட்டின் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி, அபராதத்தை செலுத்த வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.