Header Ads



புத்தளம் மாணவி வியட்நாமில் சாதனை


வியட்நாமில் நடைபெற்ற ஆசிய திறந்த டேக்வாண்டோ 2024 போட்டியில் பாத்திமா பழைய மாணவி சாதனை.


29 நாடுகளுக்கு இடையில் நடைப்பெற்ற போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாத்திமாவில் 2024 ஆண்டு க.பொ. த சாதாரண தரத்தில் சித்தியடைந்து வெளியாகிய பழைய மாணவி ராசிக் பரீத் மஸியத் சாரா வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்து புத்தளத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


இவர் பாத்திமாவில் பாடசாலையில் கற்ற காலப்பகுதியில், ஆரம்ப கட்ட போட்டிகளில் பாடசாலையை பிரதி நிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது


இவர் மறைந்த ராசிக் பரீத் மற்றும் பாயிசா ஆகியோரின் இளைய புதல்வியாவார்.


அவருக்கும் அவரது குடும்பத்தினர்,பயிற்றுவித்த ஆசிரியை இஷாதி மற்றும் உதவி வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


Fathima Balika Maha Vidyalaya- Puttalam  


No comments

Powered by Blogger.