கொழும்பு மாநகர வேட்பாளராக ஹிருணிக்கா..?
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்குத் தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்படாமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக ஹிருணிகாவை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
கடும் இழுபறிக்கு மத்தியில் தேசியப் பட்டியல் பிரச்சினைக்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தீர்வு கண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணி சிதையாத வகையில் பங்காளிக் கட்சிகளுக்கும் தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைக்கப் பெற்ற ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்களில், பங்காளிக் கட்சிகளுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய மூன்று ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Post a Comment