தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் போட்டிகளில் இப்படியும் நடந்தது
தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு(pakistan) இடையே வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி வெறும் கிரிக்கெட் போட்டியைவிடவுடம், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி, மறக்கமுடியாத நாளாக அமைந்துள்ளது.
போட்டியின் போது கிரிக்கெட் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் திடீரென, “வாழ்த்துகள் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ரபெங். அவர்களுக்கு புதிதாக மகன் பிறந்துள்ளான்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், கிரிக்கெட் மைதானத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால், ஆரவாரமடைந்த ரசிகர்கள் கை தட்டி உற்சாகமாக சத்தமிட்டனர்.
அதுமட்டுமின்றி போட்டி இடைவேளையின் போது, கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கையில் மோதிரத்துடன் மண்டியிட்டு, தனது காதலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அவரது காதலை அந்தப் பெண் ஏற்றுக்கொண்ட போது கூட்டத்திலிருந்து ஆரவாரம் வெடித்தது. அப்போதும் ரசிகர் கைகளைத் தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கிரிக்கெட்டில் சாதனைகள் மட்டுமன்றி இதுபோன்ற மறக்கமுடியாத மைல்கல் நிகழ்வுகளும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன என்று கிரிக்கெட் ரசிகர்களும், இணையவாசிகளும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
Post a Comment