ராஜபக்சர்கள் எப்போதும் இந்நாட்டின், இயல்புக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மேற்கொள்வர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது எனவும், அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பை நீக்குவதற்கான பரிந்துரைகளை வழங்கிய குழுவிற்கு உண்மையில் தேசிய பாதுகாப்பு பற்றிய புரிதல் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகைக்கு இன்று (24.12.2024) விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளின் அடிப்படையில் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் உட்பட தற்போதைய அரசாங்கமே விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
அத்தோடு, ராஜபக்சர்கள் எப்போதும் இந்நாட்டின் இயல்புக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தரப்பினர்’’ என்றார்.
Post a Comment